டீசல் விலை உயர்வை கண்டித்து மீனவர்கள் போராட்டம்!

டீசல் விலை உயர்வை கண்டித்து மீனவர்கள் போராட்டம்!

டீசல் விலை உயர்வை கண்டித்து, நாகை மாவட்ட மீனவர்கள் எட்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாநிய விலை டீசலை கூடுதலாக வழங்க வேண்டும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (புதன்கிழமை) எட்டாவது நாளாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

கோடியகரை, புஸ்பவனம் ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கடலோர கிராமங்களை சேர்ந்த ஐந்தாயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

இதனால் பல லட்சம் ரூபா வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 5315 Mukadu · All rights reserved · designed by Speed IT net