தமிழினம் வன்முறைக்குள் தள்ளப்பட்டுள்ளது!

தமிழினம் வன்முறைக்குள் தள்ளப்பட்டுள்ளது!

இன ரீதியான வன்முறைக்குள் தமிழினம் தள்ளப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீதரனின் உரையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிக்கீடு செய்து தனது கருத்துக்களையும் முன்வைத்துள்ளார்.

இதனால் சபையில் சற்று அமைதியின்மை ஏற்பட்டது.

ஸ்ரீதரனின் உரையின் போது குறுக்கிட்டு பேசிய நாமல் ராஜபக்ஷ, “மகசின் சிறைச்சாலையிலுள்ள கைதிகளின் விடுதலைக்காக நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்? நேற்று முன்னாள் அமைச்சர் ஒருவர் அரை மணி நேரத்தில் பிணையை பெற்றுக்கொண்டார்.

கடந்த முறை ஜனாதிபதி தேர்தலின்போது கைதிகளை விடுவித்து தருவதாக மக்களுக்கு கூறினீர்கள். இதுவரை என்ன செய்துள்ளீர்கள்? அதனை அறிய ஆவலாய் உள்ளோம். வெறுமனே குற்றம் சுமத்துகின்றீர்கள். ஆனால் எதனையும் செய்யவில்லை” எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், ”தங்கள் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரம் இருப்பதானது அவர்களுக்கு உடல் ரீதியில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை ஏன் இந்நாட்டின் தலைவர்களால் புரிந்துக் கொள்ள முடியாதுள்ளது.

அதுமாத்திரமின்றி தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் ஏன் பின்நிற்கிறது” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Copyright © 4471 Mukadu · All rights reserved · designed by Speed IT net