தூக்கில் தொங்கிய நிலையில் வவுனியா இளைஞனின் சடலம் மீட்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் வவுனியா இளைஞனின் சடலம் மீட்பு!

வவுனியா, கோவில்குளம் பகுதியில் நேற்று இரவு 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கோவில்குளத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 28 வயதுடைய லதுசன் என்ற இளைஞனே நேற்று இரவு அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த இரண்டு மாத காலத்திற்குள் வெளிநாடு ஒன்றில் பணி புரிந்து இலங்கை திரும்பி இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © 1872 Mukadu · All rights reserved · designed by Speed IT net