மட்டக்களப்பில் மாலதியின் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு.
முதல் மகளிர் மாவீரர் மாலதி அவர்களின் 31 ஆம் ஆண்டுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்பு வெல்லாவெளியில் உள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் அலுவலகத்தில் இன்று காலை 10.10 மணியளவில் மட்டு அம்பாறை இணைப்பாளர் நா.நகுலேஸ் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டது.
நிகழ்வுக்கான பொதுச்சுடரினை போரதீவுபற்று தவிசாளர் யோ.ரஜனி ஏற்றிவைத்தார்
மலர் மாலையினை கட்சியின் கிழக்குக்கான பேச்சாளர் கோ.சாந்தன் சூட்டினார். போராளிகள் பொதுமக்களின் மலர் வணக்கங்களுடன் நினைவுரைகளும் இடம்பெற்றது.