மட்டக்களப்பு பொலிஸார் அதிரடி: 15 பேர் கைது!
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் பொலிஸார் நடத்திய அதிரடி சோதனையில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு குறித்த பொலிஸ் சோதனை நடத்தப்பட்டிருந்த நிலையில், அதன்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடி திரிந்த 12 பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்திய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் மா அதிபரின் தலைமையிலான விசேட பொலிஸ் பிரிவினால் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.