மன்னார் மனிதபுதைகுழியில் இதுவரை 175 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
மன்னார் ச.தொ.ச.விற்பனை நிலைய வளாகத்திலிருந்து இதுவரை 175 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அங்கு அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக விசேட சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இன்றைய தினம் 84 ஆவது நாளாகவும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இது வரை 175 மனித எலும்புக்கூடுகள் குறித்த வளாகத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 169 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
ஏனைய எலும்புக் கூடுகளை மீட்கும் பணி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.
மேலும் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கு மன்னார் நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தவுடன் காபன் பரிசோதனைக்கு புலோரிடவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.