வவுனியாவில் துப்பறியும் மோப்ப நாய் கூப்பர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

வவுனியாவில் துப்பறியும் மோப்ப நாய் கூப்பர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

வவுனியா பொலிசாருக்கு பக்கபலமாக இருந்து குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்களை இலகுவில் இனங்கண்டு துப்பறியும் கூப்பர் என அழைக்கப்படும் மோப்ப நாய் இன்று காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டடிருந்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதுடன் மோப்ப நாயை அழைத்துச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக வளாகத்தில் துப்பறியும் 2 அரை வயதுடைய மோப்ப நாய் (கூப்பர்) காலை 6 மணியளவில் உடற்பயிற்சிக்கு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார்.

இதன்போது மைதான வளாகத்தில் மோப்ப நாய் மின்சாரத் தாக்கிய உயிரிழந்துள்ளது.

உடற்பயிற்சிக்காக நாயை அழைத்துச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தரான பொலிஸ் பரிசோதகர் 30018 (உதயகுமார்) மின்சாரம் தாக்கிய படுகாயமடைந்த நிலையில் வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த மோப்ப நாயை கால் நடை வைத்திய அதிகாரியின் மருத்துவப்பரிசோதனைக்காக எடுத்தச் செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net