சந்தேகப்பட்டு மனைவியை அடித்துக்கொன்றார் கணவன்!
மனைவியில் சந்தேகப்பட்டு வெளிநாட்டில் இருந்துவந்த கணவன், மனைவியை பொல்லால் அடித்துக் கொலைசெய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கடந்த 29 ஆம் திகதி மனைவியின் நடத்தைகள் குறித்து நண்பர்கள் முறைப்பாட்டைத் தெரிவித்திருந்த நிலையிலேயே குறித்தநபர் மனைவியை கொலைசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அவரது கணவரான ராமசாமியை கைதுசெய்து, நேற்று முன்தினம் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ராமசாமி – கவுசல்யா தம்பதியினருக்கு கடந்த 3 வருடங்களுக்குமுன் திருமணம் செய்துகொண்டனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ராமசாமி வேலைக்காக வெளிநாடு சென்றார். இந்தநிலையில் கடந்தமாதம் 29 ஆம் திகதி ராமசாமி வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார்.
அன்று இரவு கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு, கணவன் – மனைவிக்கு இடையே வாக்குவாதம் அதிகமானது.
இதில் ஆத்திரமடைந்த ராமசாமி வீட்டில் இருந்த பொல்லால் கவுசல்யாவை சரமாரியாக தாக்கினார். இதில், பலத்த காயமடைந்த கவுசல்யாவை அருகில் இருப்பவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
குறித்த நபரின் நண்பர்கள் வெளிநாட்டில் இருந்த அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, கவுசல்யாவின் நடத்தை குறித்து தெரிவித்ததாகவும், இதையடுத்து அவர் உடனே வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பியவுடன் மனைவியிடம் சண்டையிட்டதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

