மிகப்பெரிய திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றுகிறது!

மிகப்பெரிய திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றுகிறது!

உலகளவில் இல்லாத மிகப் பெரிய சுகாதார வைத்திய திட்டத்தை, தற்போதைய மத்திய அரசு இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளதாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற, பா.ஜ.க.வின் வணிகர் சங்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர் மேற்படி கூறியுள்ளார்.

பிரதமர் மோடியினால் ஆரம்பிக்கப்பட்ட உலகின் மினப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம் தொடர்பில் பேசிய அமைச்சர் மேற்படி கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கூறிய அவர்,

“குறித்த ‘ஆயுஸ்மான்’ திட்டத்தின் கீழ் 1300 க்கும் மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறமுடியும்.

மத்திய அரசு ஒவ்வொரு மாநிலங்களுக்கும் கொடுக்க வேண்டிய திட்டங்களை சிறந்த முறையில் கொடுத்து வருகின்றது.

பணம் இல்லாமல், அனுமதிப் பத்திரமின்றி வைத்தியத்தை பெற்றுக்கொள்ள முடியும்” எனக் கூறினார்.

அத்தோடு ஜி.எஸ்.டி.குறித்து பேசிய அவர், குறித்த வரியின் 40 வீதம் மாநிலங்களுக்கே செல்வதாகவும் தெரிவித்தார்.

மேற்குறித்த ‘ஆயுஸ்மான்’ என்னும் உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமானது, 10 கோடி மக்கள் பயன்பெறமுடியும்.

இத்திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு உட்பட்ட வங்கி கடன் வைத்திருக்கும் எவரும் சிகிச்சை பெற்று கொள்ள முடியும்.

மேலும் ஒரு குடும்பத்திற்கு 5 லட்சம் வரையில் இத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறமுடியும்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net