2019 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு சட்டத்தில் இரா.சம்பந்தனுக்கு 9 கோடி!

2019 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு சட்டத்தில் இரா.சம்பந்தனுக்கு 9 கோடி!

அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் தெளிவூட்டும் 2019 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

இதில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு 9 கோடியே 48 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதிக்கு 1347 கோடியே 71 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவும், பிரதமருக்கு 166 கோடி 74 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் நிதியாண்டின் தேவைக்காக 4 ஆயிரத்து 376 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்த நீதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்டது.

இதில் பாதுகாப்பு அமைச்சுக்கு 30 ஆயிரத்து 611 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 1889 Mukadu · All rights reserved · designed by Speed IT net