ஊற்றுப்புலம் குளத்தின் அபிவிருத்தியை நிறுத்தியது வனவளத்திணைக்களம்!

ஊற்றுப்புலம் குளத்தின் அபிவிருத்தியை நிறுத்தியது வனவளத்திணைக்களம்!

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் அரச கரும மொழிகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்ட ஊற்றுப்புலம் குளத்தின் அபிவிருத்திப் பணிகளை வனவளத்திணைக்களம் நிறுது்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில்

கிளிநொச்சி கமலசேவைகள் திணைக்களத்தின் கீழ் உள்ள பதிவு செய்யப்பட்ட குளமான ஊற்றுப்புலம் குளம் 23 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது அதனை கிளிநொச்சி வனவளத்திணைக்களம் தங்களுடைய வனவளப் பிரதேசம் எனத் தெரிவித்து தடுத்து நிறுத்தியுள்ளது.

இதனால் குறித்த 23 மில்லியன் ரூபா நிதி திரும்பிச் செல்லும் நிலையில் காணப்படுகிறது. என கமநல சேவைகள் திணைக்களம் கவலைத் தெரிவித்துள்ளர்.

குறித்த குளத்தித்தை புனரமைப்புச் செய்வதனால் தங்களுடைய வனவளம் பாதிப்படைகிறது, பல பெறுமதியான மரங்கள் அழிவடையும் என்பதனால் குளத்தினை அபிவிருத்தி செய்ய முடியாது எனத் தெரிவித்து வனவளத்திணைக்களம் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தியை தடுத்து நிறுது்தியுள்ளது.

வருகின்ற சில நாட்களுக்கு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாது விட்டால் பருவ மழை ஆரம்பித்து விடும் அதன் பின்னர் குளத்தினை புனரமைக்க முடியாது போய்விடும் இதன்காரணமாக ஒதுக்கப்பட்ட நிதியும் திரும்பிச்சென்றுவிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வனவளத்திணைக்கள அதிகாரிகளுடன் கமநல சேவைகள்திணைக்கள அதிகாரிகள் மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் பேசிய போதும் இதுவரை எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை

ஊற்றுப்புலம் குளம் புனரமைக்கப்படுவதன் மூலம் நூற்றுக்கணக்காக ஏக்கர் பரப்பளவில் நெற் பயிர்ச்செய்க்கை மேற்கொள்ளப்படுவதோடு, பிரதேசத்தின் நிலத்தடி நீரையும் பாதுகாக்க முடியும்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net