முருங்கைக்காயின் விலைகளில் மாற்றம்!
திருகோணமலை – மூதூர் தோப்பூர் பிரதேசத்தில் முருங்கைக்காயின் விலையில் தற்போது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூதூர் மற்றும் தோப்பூர் பிரதேசத்தில் ஒரு கிலோகிராம் முருங்கைக்காய் 50 ரூபாய் தொடக்கம் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு கிலோகிராம் முருங்கைக்காய் 20 ரூபாய் தொடக்கம் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதனால் தூரப் பிரதேசங்களிலிருந்து அதிகமான வியாபாரிகள் மூதூர் தோப்பூர் பிரதேசத்துக்கு வருகை தந்து முருங்கைக்காய் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தாம் நட்டமடைந்து வருவதாகவும் வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, தற்போது மழை பெய்து வருவதால் அறுவடைகள் மேற்கொள்வதிலும் சிரமம் ஏற்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.