யாழில் மனித எலும்புக் கூடுகள் மீட்பு!
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் மின்சார கம்பம் நாட்டுவதற்காக நிலத்தை தோண்டிய போது எலும்புக்கூடுகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அச்சுவேலி – பத்தமேனி சூசையப்பர் வீதியில் இலங்கை மின்சார சபையினர் மின் கம்பத்தை நாட்டுவதற்கு நிலத்தை தோண்டியுள்ளனர்.
இதன் போது நிலத்துக்குள்லிருந்து மண்ணைடோடு, கை, கால், என மனித எலும்புகள் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் எலும்புகள் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.