யாழிலுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!

யாழிலுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!

யாழில் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

யாழ் மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 16ஆம் திகதி குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முப்படைத் தளபதிகள் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

யாழ் குடாநாட்டில் தற்போதும் 4 ஆயிரத்து 265 ஏக்கர் காணி பாதுகாப்பு படையினர் வசமுள்ளதாக கூறப்படுகிறது.

அவற்றில் மக்களிற்குச் சொந்தமான காணிகள் மற்றும் பாடசாலைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் அனைத்தும் உரியவர்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும், அதற்காக மாவட்டந்தோறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் படை அதிகாரிகள் அனைவரும் கூடி ஆராய்ந்து அதன் அறிக்கையை உடன் தனக்கு சமர்ப்பிக்குமாறு வடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணி கூட்டத்தில் வைத்து ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 4771 Mukadu · All rights reserved · designed by Speed IT net