இலங்கையில் புதிய தொழில்நுட்பத் தொலைக்காட்சி வகைகள் அறிமுகம்!
சிங்கர் பி.எல்.சீ. மற்றும் சொனி இன்டர்நஷனல் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து புதிய தொலைக்காட்சி உற்பத்திகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
அந்தவகையில், OLED மற்றும் 4K HDR தொலைக்காட்சி உற்பத்தி மற்றும் அதனுடன் இணைந்ததாக Master உற்பத்தி வரிசையான A9F மற்றும் Z9F தொலைக்காட்சி உற்பத்தி வரிசைகளை அறிமுகம் செய்துள்ளன.
இந்த உற்பத்தி அறிமுகப்படுத்தல் நிகழ்வு அண்மையில் கொழும்பு ஷங்கரில்லா ஹோட்டலில் இடம்பெற்றது.
மேம்பட்ட பண்பு வேறுபாடு (Contrast), வர்ணம் மற்றும் தெளிவு ஆகியவற்றை வழங்கும் வகையில் இப்புதிய தொலைக்காட்சி உற்பத்தி வரிசை வடிவமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 4K HDR OLED தொலைக்காட்சி தொழில்நுட்பத்தில் கட்டமைப்புச் செய்யப்பட்டு, பரந்த அளவிலான பார்வையாளர்களுக்கான அதிநவீன உயர் ரக OLED தொலைக்காட்சிகளை வழங்குவதற்காக BRAVIA OLED உற்பத்தி வரிசையை Sony விஸ்தரிப்புச் செய்துள்ளது.
மேலும் Acoustic Surface தொழில்நுட்பமானது உயர் தரத்திலான படத்தை வழங்குவது மட்டுமன்றி, கிறங்க வைக்கும் இசையையும் வெளிக்கொணருகின்றது.
இவ்வாறு நுணுக்கமான தொழில்நுட்ப செயற்பாட்டோடு கூடிய தொலைக்காட்சி வகைகள் நாடளாவிய ரீதியிலுள்ள சிங்கர் பி.எல்.சீ. விநியோக வலையமைப்பு மற்றும் அதற்கு ஈடாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள விற்பனைக்குப் பின்னரான பேணற்சேவை வலையமைப்பு மூலம் விஸ்தரிப்புச் செய்யவுள்ளது.
இது தொடர்பில் சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ் தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த உற்பத்திகள், சேவை மற்றும் அனுபவத்தை வழங்குவதையிட்டு சிங்கர் நிறுவனம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளது.
இந்த அதிநவீன Sony தொலைக்காட்சிகள் இலங்கை இல்லங்களில் மக்களின் வாழ்க்கை முறையை வளப்படுத்தும் வகையில் பல்வேறு புத்தாக்கமான தொழில்நுட்பவியல் அம்சங்களைக் கொண்டுள்ளன” என்று குறிப்பிட்டார்.
இவ்விழாவில், சிங்கர் குழுமத்தின் பணிப்பாளரும் சபைத் தலைவருமாக மொஹான் பண்டிதகே, சிங்கர் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ், பிரதம தொழிற்பாட்டு அதிகாரியான மகேஷ் விஜயவர்தன, சந்தைப்படுத்தல் துறை பணிப்பாளர் குமார் சமரசிங்க, சந்தைப்படுத்தல் முகாமையாளர் பியும் ஜெயதிலக மற்றும் வர்த்தக நாம முகாமையாளர் தாரக வணர்குலசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன், Sony நிறுவனத்தின் சார்பில் Sony தென் கிழக்கு ஆசிய பிராந்திய சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரியான ஜெரமி ஹெங், Sony International (Singapore) Ltd இலங்கை பிரதிநிதி அலுவலகத்தின் கிளைத் தலைமை அதிகாரியான ஜஸ்டின் வோங் மற்றும் Sony International (Singapore) Ltd இலங்கை பிரதிநிதி அலுவலகத்தின் சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரியான டில்ஷான் கம்மம்பில ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.