சென்னையில் ஐ.ஏ.எஸ் அகாடமி நிறுவனர் தற்கொலை!

சென்னையில் ஐ.ஏ.எஸ் அகாடமி நிறுவனர் தற்கொலை!

சென்னையில் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர் சங்கர் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த சங்கர்.  இவரது சொந்த ஊர் திருச்செங்கோடு அருகே உள்ள நல்லாங்கவுண்டம்பாளையம். சென்னை அண்ணா நகரில் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி நடத்தி வந்தார்.

இந்த நிலையத்தில் சுமார் 1500 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

குறித்த நபர் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அவரது உடல் ராயப்பேட்டை அரசு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சங்கர் தற்கொலை சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net