தபாலில் அனுப்பிவைக்கப்பட்ட பாம்பு!
ஓய்வுபெற்ற பெண் தபால் ஊழியர் ஒருவருக்கு பொதியில் பாம்பு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த அணிலா என்ற 60 வயதான ஓய்வுபெற்ற தபால் ஊழியருக்கு ஒரு பொதி வந்திருந்தது.
அந்த பொதி பிளாஸ்டிக் பையால் உறுதியாக சுற்றப்பட்டிருந்தது. பொதியை பிரித்தபோது அதற்குள் 15 செ.மீ. நீளம் கொண்ட பாம்பு ஒன்று இருந்துள்ளது.
ஆனால் அந்த பொதியில் அதனை அனுப்பியவர் தொடர்பான விபரங்கள் எதுவுமே எழுதப்பட்டிருக்கவில்லை என கூறப்படுகின்றது.
குறித்த ஓய்வுபெற்ற பெண் தபால் ஊழியரை பழிவாங்குவதற்காக எவரேனும் இவ்வாறு அனுப்பியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.