புதையல் தோண்டிய 12 பேர் மட்டக்களப்பில் கைது!
மட்டக்களப்பு – திராய்மடு சவுக்கடிப் பிரதேசத்தில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட 12 பேரை நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித் பிரதேசத்தில் சம்பவதினமான நேற்று வியாழக்கிழமை இரவு சுற்றிவளைத்து சோதனையின்போது புதையல் தோண்டலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 12 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
மட்டக்களப்பு , நீர்கொழும்பு, சிலாபம், அலாவத்தை, அக்குறனை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 6 தமிழர்களும் 6 இஸ்லாமியர்களுமாக 12 பேரை கைது செய்ததுடன் ஸ்கானர் மற்றும் புதையல் தோண்டலுக்குப் பயன்படுத்திய பொருட்களையும் மீட்டுள்ளனர்
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்