புலம்பெயர் இலங்கைத் தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!
புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களை, தாயகத்தில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே அழைத்து விடுத்துள்ளார்.
வெளிநாட்டில் நிரந்தரமாக குடியேறியுள்ள மற்றும் தற்காலிகமாக தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள், நாட்டில் நிதி முதலீடுகளை மேற்கொள்ள வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பிரான்ஸ் தூதுவர் புத்தி ஆத்தவுத ஆகியோர் தலைமையில் பிரான்சில் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் அல்லது அதற்கு முன்னர் இலங்கையில் செயற்பட்ட அமைப்புகள் சிலவற்றின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இலங்கை அரசாங்கங்களின் செயற்பாடுகள் மீது அதிருப்தி அடைந்ந நிலையில், தாயகத்தை விட்டு வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்ததாக கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இலங்கையில் நடக்கும் மோசமாக சம்பவங்கள் தொடர்பிலும் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இலங்கையிலுள்ள பல்வேறு துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ள நாட்டுக்கு வருமாறு வடக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
தாயகத்தில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ள வசதிகளை ஏற்படுத்தி தருமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு பதிலளித்த ஆளுநர், தான் இந்த சவாலை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் சந்திப்பை போன்று சுவிட்சர்லாந்தில் வாழும் தமிழ் மக்களுடனும் இவ்வாறான சந்திப்பு ஒன்றை நடத்த எதிர்பார்த்துள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.