வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து!
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வாகனம் ஒன்று விபத்துக்குளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று பகல் தாண்டிக்குளம் பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
வாகனத்தில் பயணம் செய்த நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.