குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கிய கோத்தபாய!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய முயற்சிக்கப்பட்டமை குறித்து கோத்தபாயவிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு மணித்தியாலங்கள் கோத்தபாயவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்கு மூலம் பெற்றுக் கொண்டுள்ளனர்.
நேற்றைய தினம் கோத்தபாய, குற்ற புலனாய்வுப் பிரிவிற்கு சென்று இரண்டு மணித்தியாலங்கள் வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.
அத்துடன், தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கோத்தபாய ராஜபக்ச எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.