யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்களின் திட்டம்!

யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்களின் திட்டம்!

சிறைச்சாலைகளில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 4 நாட்களாக முன்னெடுத்தவரும் நடைபவணி இன்று அநுராதபுரம் சிறைச்சாலையை சென்றடைய உள்ளது.

கடந்த 9ஆம் திகதி யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணியில் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன், பாடசாலை மாணவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் பொது மக்களும் இந்த நடைபவணிக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

ஏ9 வீதி ஊடாக கிளிநொச்சி – வவுனியா ஊடாக நடைபவணியை மேற்கொண்ட மாணவர்கள் இன்றைய தினம் அநுராதபுரத்தை சென்றடைய உள்ளனர்.

அங்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ள அவர்கள், அதன் பின்னர், அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net