கண்டாவளையில் அனுமதி இன்றி பனை மரம் அகற்றியவர்கள் கைது!
கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில் தனியார் காணி ஒன்றில் நேற்று காலை அனுமதி இன்றி பனைமரங்களை ஜேசிபி கொண்டு அகற்றிய குற்றச்சாட்டில் காணி உரிமையாளர் மற்றும் வாகன சாரதி ஆகியோர் தர்மபுரம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
தர்மபுரம் பொலிசார் அவர்கள் பயன்படுத்திய வாகனம் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் கிளிநொச்சி மாவட்ட விசேட பிரிவு பொறுப்பதிகாரி சத்துரங்கவிடம் பாரப்படுத்தியுள்ளனர்
குறித்த சந்தேகநபர்களை இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்த இருப்பதாக விசேட பிரிவு பொறுப்பதிகாரி தெரிவிக்கின்றார்.