காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் அழிக்கப்படுவார்கள்!
இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருமானால் இலங்கையில் ஒரு தமிழன் கூட இருக்கமாட்டான் என்பதுடன் நம்முடைய தமிழர்களும் அழிக்கப்படுவார்களென மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார
சென்னை துறைமுக விருந்தினர் மாளிகையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“காங்கிரஸ் காட்டிக்கொடுத்த காரணத்தினால் தான் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டார்களென குற்றம் சுமத்தியவர்கள் இன்று அமைதியாக உள்ளனர்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, காங்கிரஸ் மற்றும் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தமை தொடர்பாக எதனையும் இதுவரை தெளிவுப்படுத்தவில்லை.
ஆகையால் தற்போதைய சூழ்நிலையில், தமிழ் சமுதாயத்தையும், தமிழர்களையும் காப்பாற்றுவதற்கு மோடியை தவிர வேறு எவராலும் முடியாது.
மேலும் ஈழத்தமிழர் படுகொலையில் பிரதான குற்றவாளி காங்கிரஸ், ஆகையால் தமிழர்கள் எவ்வாறு அவர்களுக்கு ஆதரவு வழங்குவார்கள்” என அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.