தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது!
தமிழ்நாட்டில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நேற்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் அங்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார்.
மேலும் தேசிய அளவில் உருவாகி உள்ள இந்த கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இணைந்துள்ளது என தெரிவித்தார்.
அத்துடன் எங்கள் கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது என உறுதிபட கூறிய திருமாவளவன், வேண்டுமானால், கமல் ஹாசன் தங்களுடன் இணைந்தால் வரவேற்க தயார் என்றும் தெரிவித்தார்.