அரசியலமைப்பு வரைபினை கையளிக்கும் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது!
புதிய அரசியலமைப்பு வரைபினை அரசியலமைப்பு பேரவையிடம் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
மொழிபெயர்ப்பில் ஏற்பட்டுள்ள சர்சை காரணமாக குறித்த அறிக்கையினை அரசியலமைப்பு பேரவையிடம் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த அறிக்கை எதிர்வரும் 25ஆம் திகதி சமர்ப்பிக்கப்படாது.
எனினும், குறித்த அறிக்கையானது எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி காலை சமர்ப்பிக்கப்படவுள்ளது’ என தெரிவித்துள்ளார்.