கிளிநொச்சி பலரையும் கிலி கொள்ள வைத்த பகுதி!
கிளிநொச்சி பலரையும் கிலி கொள்ள வைத்த பகுதி என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி ஒளிப்படப்பிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று(திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் கிளிநொச்சி பாரதிஸ்டார் விடுதியில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இயக்குனர் பாரதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இந்த மண்ணிலேயே வீர தமிழன், வீர தமிழச்சி வாழ்ந்ததாகவும், வாழ்வதாகவும் அவர் உணர்ச்சிபூர்வமாக கருத்து தெரிவித்திருந்தார்.