மக்களே அவதானம்! நிறமூட்டிய அரிசி வகைகள் விற்பனையில்!

மக்களே அவதானம்! நிறமூட்டிய அரிசி வகைகள் விற்பனையில்!

சந்தையில் நிறமூட்டிய அரிசி விற்பனை தொடர்பில் தெரியவந்துள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டரிசிக்குப் பதிலாக தற்போது நிறமூட்டிய அரிசி விற்பனை செய்யப்படுவதாக, சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா, குருநாகல், பசறை, அநுராதபுரம், உள்ளிட்ட பகுதிகளில் இந்த அரிசி விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிவப்பு நிறத்தில் அரிசி காணப்படுமாயின் அல்லது விரலில் வர்ணங்கள் ஒட்டும் பட்சத்தில், இது குறித்து அறியத்தருமாறும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

சிவப்பு அரிசிக்குப் பதிலாக வர்ணம் கலக்கப்பட்ட வேறு அரிசி வகைகள், சந்தையில் விற்பனை செய்யப்படுவதால், மக்கள் இது சம்பந்தமாக மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும், அதன் செயலாளர் மகேந்திர பாலசூரிய மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net