மன்னாரில் மாணவர்கள் பேருந்தை வழிமறித்து கவனவீர்ப்புப் போராட்டம்.
மன்னார் மடு பிரதான வீதியில் இன்று காலை பாடசாலை மாணவர்கள் பேருந்தை வழிமறித்து கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று காலை 7மணியளவில் மன்னார் மடு பிராதன வீதியில் சென்ற பேருந்தை குஞ்சுக்குளம், மாதா கிராமத்தில் ஒன்றிணைந்த பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலைக்கு பேருந்து சேவை மேற்கொள்ளுமாறு கோரி கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.
பாடசாலைக்குச் செல்வதில் கால தாமதம் ஏற்படுகின்றது எனவே எமது பகுதிக்கு பேருந்து சேவை ஒன்றினை மேற்கொள்ளுமாறு கோரியே மாணவர்கள் இப்போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பகுதி யுத்தப்பாதிப்பிற்குள்ளான கிராமமாகும் மன்னாரில் பொதுமக்கள் கணிசமாக வசிக்கும் பகுதிகளுக்கு பேருந்து சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதிலும் குறித்த குஞ்சுக்குளம் மாதா கிராமத்திற்கு பேருந்துச் சேவை மேற்கொள்ளவில்லை இதன் காரணமாக மாவர்கள் உட்பட அப்பகுதியிலுள்ளவர்கள் பல சிரமங்களையும் எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்