யாழில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பில் 40 பேர் கைது!

யாழில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பில் 40 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் 4 பொலிஸ் பிரிவுகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் நடவடிக்கையில் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களளுள் 151 பேருக்கு எதிராக வீதிப் போக்குவரத்து விதி மீறல்களுக்காக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய யாழ்ப்பாணம், மானிப்பாய், சுன்னாகம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுகளில் நேற்று மாலை தொடக்கம் இந்த பொலிஸ் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம், மானி்ப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் அவற்றுடன் கோப்பாய் பொலிஸ் பிரிவையும் இணைத்து 4 பொலிஸ் பிரிவுகளில் இந்தச் பொலிஸ் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

“வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபடுவோர் மற்றும் நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்படுபவர்களை இலக்காக வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதில் பொலிஸாரால் தேடப்பட்டவர்கள் 7 பேர், நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 7 பேர், வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் 10 பேர் என மொத்தம் 41 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் என்ற குற்றச்சாட்டில் 151 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net