வன்னி விழிப்புனர்வு சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச விழிப்புனர்வற்றோர் தினம்

வன்னி விழிப்புனர்வு சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச விழிப்புனர்வற்றோர் தினம் இன்று கிளிநாச்சியில் கடைப்பிடிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

கிளிநாச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட விழிப்புனர்வு நடைபயணம் கரைச்சி பிரதேச செயலகம் வரை சென்று விழிப்புலனற்றோருக்கான நூலக வசதியினை ஏற்படுத்தி தருமாறு கோரி பிரதேச சபை தவிசாளரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

தொடர்ந்து குறித்த நடை பயணம் கரைச்சி பிரதேச செயலகம் வரை சென்று தமக்கான ஓய்வு மண்டபம் ஒன்றை அமைப்பதற்காக காணி ஒன்றை பெற்று தருமாறு கோரி கரைச்சி உதவி பிரதேச செயலாளரிடம் மகயர் கையளிக்கப்பட்டது.

தொர்ந்து குறித்த விழிப்புனர்வு நடைபயணம் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபம் வரை சென்று அங்கு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பா ம உறுப்பினர் சிவமோகன் கலந்து கொண்டிருந்தார்.

Copyright © 3023 Mukadu · All rights reserved · designed by Speed IT net