ஏக்கிய இராச்சிய என்பது ஒருமித்த நாடு அல்ல! அது ஒற்றையாட்சி!

ஏக்கிய இராச்சிய என்பது ஒருமித்த நாடு அல்ல! அது ஒற்றையாட்சி!

ஏக்கிய இராச்சிய என்பது ஒருமித்த நாடு என்று அர்த்தப்படாது. அது ஒற்றையாட்சி என்பதே உண்மையாகும்.

ஆனால் ஏக்கிய இராச்சிய என்பது ஒருமித்த நாடு என அர்த்தப்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழு கூட்டம் அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றிருந்தது.

இதன்போது புதிய அரசியலமைப்பில் ஏக்கிய இராச்சிய என கூறப்பட்டுள்ள சொல்லுக்கு ஒருமித்த நாடு என்பது அர்த்தமல்ல.

உண்மையில் ஏக்கிய இராச்சிய என்பது ஒற்றையாட்சியே. இது தமிழ் மக்களை அப்பட்டமாக ஏமாற்றும் செயல் எனவும் நான் கூறியிருந்தேன். அதனை ஏற்றுக் கொண்டு டக்ளஸ் தேவானந்தா கூறுவதில் நியாயம் இருக்கின்றது. என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.

ஆனால் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன் என்னை கேட்கிறார் நாட்டை பிரிக்கபோகிறீர்களா? நாட்டை குழப்பப் போகிறீர்களா? என நான் அவரிடம் திருப்பி கேட்டேன்.

நான் மக்களை உசுப்பேத்தவில்லை. நீங்கள்தான் மக்களை உசுப்பேத்தினீர்கள். எதற்காக மக்களை உசுப்பேத்தினீர்கள்? எனக் கேட்டேன். அப்போது பிரதமர் ரணில் தலையிட்டு தமிழ் மொழி தெரியாவிட்டாலும் ஏதோ பிரச்சினை உள்ளது.

என்பதை நான் உணர்ந்து கொள்கிறேன். ஆகவே தமிழ் மொழியில் புலமை பெற்றவர்களை அழைத்து பேசி தீர்மானிக்கலாம் என கூறியிருக்கின்றார். இந்நிலையில் ஊடகங்கள் ஒருபக்க கருத்துக்களை மட்டும் செய்தியாக்குகின்றன.

ஆனால் எங்களுடைய பக்கத்தில் உள்ள கருத்துக்களை அவர்கள் கருத்தில் எடுப்பதில்லை என்றார். தொடர்ந்து புதிய அரசியலமைப்பு வருமா? வராதா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது,

இந்த கேள்விக்கு என்னுடைய பதில் வரும்.. ஆனால் வராது.. என்பதே என கூறிய டக்ளஸ் தேவானந்தா புதிய அரசியலமைப்பு அரசியலமைப்பு சபைக்கு வரும். அதற்கு அப்பால் வராது என்று குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 5962 Mukadu · All rights reserved · designed by Speed IT net