தந்தை செல்வாவின் திருவுருச் சிலை திறப்பு விழா

தந்தை செல்வாவின் திருவுருச் சிலை திறப்பு விழா

மட்டக்களப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் அமரர் தந்தை சா.ஜே.வே.செல்வநாயகத்தின் திருவுருவச் சிலை மட்டக்களப்பில் நேற்று மாலை திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பேருந்து நிலைய சந்தியில் வாவிக்கரை வீதி 01ல் இத் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

இதன்போது தந்தை செல்வா சிலை திறப்பு சிறப்பு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் மாணவர்கள் மத்தியில் நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Copyright © 7446 Mukadu · All rights reserved · designed by Speed IT net