போட்டி போட்டு விசம் அருந்திய மாமியாரும் மருமகளும்!

போட்டி போட்டு விசம் அருந்திய மாமியாரும் மருமகளும்!

தமிழ்நாட்டில் சேலம் அருகே குடும்பத் தகராறு காரணமாக போட்டி போட்டுக்கொண்டு மாமியாரும் மருமகளும் விசம் அருந்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தால் மாமியார் உயிரிழந்ததோடு, மருமகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் மற்றும் அவரது மனைவி சரஸ்வதி ஆகியோர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

இதையடுத்து கணவன் மனைவி இருவரும் தனியாக குடியிருப்பது தொடர்பில் ஆலோசித்தனர். இதற்கிடையே இவ்விடயம் தொடர்பாக சரஸ்வதிக்கும் அவரது மாமியாருக்கும் இடையே கருத்து முரண்பாடு வந்துள்ளது.

இதில் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இச்சம்பவமே மாமியாரின் உயிரைப் பறித்ததோடு, மருமகளை அவசர பிரிவிலும் சேர்த்துள்ளது. இது தொடர்பில் பொலிஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீர்க்கப்படக்கூடிய பிரச்சினைகளுக்குப் பின்னால் இப்படியம் நடக்கிறதா? எனும்பொழுது ஆச்சரியமாகத்தான் உள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net