வவுனியாவில் டிப்பர் வாகனச்சாரதி ஒருவர் மின்சாரம் தாக்கி பலி!
வவுனியாவில் இன்று அதிகாலை டிப்பர் வாகனச்சாரதி ஒருவர் மின்சாரம் தாக்கி உயரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா மணிப்புரம் பகுதிக்கு தனது டிப்பர் வாகனத்தில் மண் ஏற்றிச் சென்ற செட்டிகுளம் வீரபுரம் பகுதியைச் சேர்ந்த அன்ரன் ஜெகதீஸ்வரன் (ரமேஷ்) 43 வயது என்பவர்,
இன்று அதிகாலை 3 மணியளவில் டிப்பர் வாகனத்திலுள்ள மண்ணை வீட்டிற்குள் பறித்துவிட்டு உயற்றிய பெட்டியுடன் டிப்பர் வாகனத்தை வீட்டிற்கு வெளியே செலுத்தியுள்ளார்.
இதன்போது வீதியிலிருந்த மின்கம்பத்தில் பெட்டி முட்டியபோது மின்சாரம் டிப்பர் வாகனத்தில் பாய்ந்து சாரதியை தாக்கியுள்ளது.
இதன்போது சம்பவ இடத்திலேயே வாகனச்சாரதி உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்