#me too தொடர்பில் ஆராய வேண்டும்!
#me too தொடர்பில் ஆராய வேண்டிய அவசியம் இருப்பின், அது தொடர்பில் விசாரிக்க வேண்டும் என, மக்கள் நீதி மய்யத்தின்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் (திங்கட்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் மேற்படி கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கூறிய அவர்,
“பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் சினிமாத்துறையில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் உள்ளது.
#me too மூலம் பெண்கள் தமது பிரச்சினைகளை வெளிக் கொண்டு வந்தால், பாலியல் சீண்டுதல்கள் குறைய வாய்ப்புள்ளதென்பதே, உலகளவில் பேசப்படும் விடயம்” எனக் கூறியுள்ளார்.
அத்தோடு நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால், அவரை வரவேற்பதாகவும் கமல்ஹாசன் மேலும் தெரிவித்துள்ளார்.