யாழில் மகனின் கண் முன்னே தாயை கொலை செய்தவர்களை விளக்கமறியலில்!
யாழ். ஊரெழு பகுதியில் மகனின் கண் முன்னே தாயை கொலை செய்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த மூன்று பேரையும் எதிர் வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் நேற்று உத்தரவிட்டுள்ளது.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு சரஸ்வதி சனசமூக நிலைய பகுதியில் நேற்று முன்தினம் குடும்பப் பெண் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
வீட்டுக்குள் புகுந்த கும்பல் ஒன்று மகனைத் தாக்க முற்பட்ட போது, அதனைத் தடுக்கச் சென்ற தாயாரே இதில் உயிரிழந்திருந்தார்.
சம்பவத்தில் 58 வயதான சந்திரராசா விஜயகுமாரி என்ற குடும்பப் பெண் கொலை செய்யப்பட்டதோடு அவரது மகன் காயமடைந்திருந்தார்.
இந்த நிலையில் கொலையுடன் தொடர்புடைய மூவர் நேற்று காலை கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.