முதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார்!

முதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவன தலைவர் கமல் ஹாசன், முதலமைச்சர் கனவில் மிதப்பதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே சித்தோட்டில் நேற்று(செவ்வாய்க்கிழமை) பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்ச்சிக்குப் பின், செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தமிழக அரசு மீது, கமல் ஹாசன் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக குறிப்பிட்டார்.

எங்கள் ஆட்சியால், யாருக்கும் எந்த வித நஷ்டமும் ஏற்பட்டது கிடையாது என்றும் ஆனால், கமல் ஹாசனால், சில பட தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்தித்தனர்.

மேலும் சில தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அமைச்சர் கே.சி. கருப்பணன் குற்றம் சாட்டினார்.

Copyright © 4101 Mukadu · All rights reserved · designed by Speed IT net