இனவெறித் தனமான கருத்துக்களை வெளியிடும் பீரிஸ்!

இனவெறித் தனமான கருத்துக்களை வெளியிடும் பீரிஸ்!

சமஷ்டியிலான ஒரு தீர்வுத் திட்டத்தை சுய நிர்ணய உதவியுடன் நாங்கள் பரிசீலிப்பதற்கு தயாராக இருக்கிறோம் என கடந்த காலங்களில் அறிக்கை வெளியிட்ட முன்னாள் அமைச்சரும் பொது எதிரணியன் சிரேஷ்ர உறுப்பினருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று இனவெறித்தமான கருத்துக்களை வெளியிடுகின்றார் என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தை பாதுகாக்கின்ற நடவடிக்கை எடுக்கின்றது எனவும் தமிழ் மக்களின் உரிமையை பறிக்கின்றது என ஜி.எல்.பீரிஸ் தெரிவித்த கருத்து தொடர்பாக வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜீ.எல். பீரிஸ் அவர்களின் கூற்று சிரிப்பதா அழுவதாக என்று தெரியவில்லை. ஏனென்றால் இவர் இனப்பிரச்சினைத் தீர்வு விடையங்களில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் காலத்தில் 1994 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் வெளியிட்டு தீர்வுத்திட்டத்தை மெல்ல மெல்ல சுருக்கி ஓரளவுக்கேனும் ஒரு தீர்வைக் கொடுக்கக்கூடிய ஒரு தீர்வுத் திட்டத்தை தயாரித்தவர்.

அதுமட்டுமன்றி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரச தரப்புக்கும் இடையில் ஒஸ்லோவில் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் அரச தரப்பிற்கு தலைமை தாங்கியவர்.

அன்று ஒரு சமஷ்டியிலான ஒரு தீர்வுத் திட்டத்தை முழு சுய நிர்ணய உதவியுடன் நாங்கள் பரிசீலிப்பதற்கு தயாராக இருக்கிறோம் என்று இரண்டு தரப்பும் ஒப்புக்கொண்டு கூட்டறிக்கையை வெளியிட்டது.

அவ்வாறு செய்த பீரிஸ் இன்று இனவெறித்தனமாக கருத்துக்களை வெளியிடுவது மாத்திரமன்றி 50 லட்சம் வாக்குகள் இருக்கின்றது என்று கூறுகின்ற பொதுஜன பெரமுன கட்சி ஏன் இந்த அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாதுள்ளது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Copyright © 6971 Mukadu · All rights reserved · designed by Speed IT net