இன்று கிளிநொச்சியில் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழு!
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழு இன்று கிளிநொச்சி பரந்தன் ரசாயன தொழிற்சாலை அமைப்பது தொடர்பில் பார்வையிட்டனர்
இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இயங்கி வந்த பரந்தன் இரசாயன தொழிற்சாலை அமைந்திருந்த பகுதியை பார்வையிட்டனர்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் ஜப்பான், கொரியா, அலங்கை ஆகிய நாட்டின் பொறியியலாளர்கள் குழு குறித்த தொழிற்சாலை தொடர்பில இன்று பார்வையிட்டனர்.
சுமார் 30 வருடங்களிற்கு மெலாக குறித்த பகுதியில் இயங்கி வந்த தொழிற்சாலை மீள இயக்குவது தொடர்பில் நீண்டகாலமாக முயற்சிகள் இடம்பெற்றன.
இந்த நிலையில் இன்று குறித் குழுவினர் வருகை தந்திருந்தனர். ஆணையிறவு உப்பளத்திலிருந்து பெறப்படும் இரசாயன கழிவுகளை சூழல் மாசடையாதவாறு எவ்வாறு குறித்த தொழிற்சாலை ஊடக இராயன உற்பத்திகளை மேற்கொள்ள முடியும் என்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே குறித்த குழுவினர் இன்று வருகை தந்துள்ளனர்.
குறித்த குழுவினர் தொடர்ந்து ஆணையிறவு உப்பளம் பகுதிக்கும் சென்றிருந்தமை குறிப்பிடதக்கதாகும்.
தொடர்ந்து அமைச்சர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார். குறித்த கெமிக்கல் தொழிற்சாலை மற்றும் ஒட்டுசுட்டான் தொழிற்சாலை உருவாக்கம் தொடர்பிலும், ஆணையிறவு உப்பளத்தினை விரிவாக்கம் செய்வது தொடர்பிலும் அமைச்சர் அதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்