பேரூந்தில் கஞ்சா கடத்திவர் கைது!
யாழ்பாணம் நுவரெலியா தனியார் பேருந்து ஒன்றில் நான்கு கிலோகிராம் கேரள கஞ்சா கடத்தியவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக பேரூந்தை வழிமறித்த பொலிசார் குறித்த நபரை கஞ்சாவுடன் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது கிளிநொச்சி விசேட பிரிவு பொறுப்பதிகாரி டி எம் சத்துரங்க தலமையிலான குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
கஞ்சாவுடன் கைதானவர் ரம்பாவையை சேர்ந்த இளைஞன் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவரையும் சான்றுப் பொருட்களையும் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்ப்படுத்த இருப்பதாக்க பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.