மன்னாரில் இராணுவத்தின் வசமிருந்த 4 ஏக்கர் காணி விடுவிப்பு!

மன்னாரில் இராணுவத்தின் வசமிருந்த 4 ஏக்கர் காணி விடுவிப்பு!

வடக்கில் முப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொது மக்களின் காணிகள் பாவனைக்காக சுமார் 87 ஏக்கர்களை விடுவிக்க கடந்த புதன்கிழமை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந் நிலையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை புதைகுழி பகுதியின் அருகில் அமைந்திருந்த இராணுவத்தின் வசம் காணப்பட்ட சுமார் 5 ஏக்கர் பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மன்னார்-மதவாச்சி பிரதான வீதி முருங்கன் எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம் காணப்பட்ட பொது மக்களின் 4 ஏக்கர் காணியும் இராணுவத்திடம் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த இராணுவ முகாம் கடந்த 2006 ஆம் ஆண்டளவில் முருங்கன் பகுதியில் அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக சுமார் 12 வருடங்கள் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த நிலையில் கடந்த புதன் கிழமை முழுதாக அகற்றப்பட்டு மக்களுடைய பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

முருங்கன் பகுதியில் காணப்பட்ட குறித்த இராணுவ முகாமை அகற்ற கோரி பல்வேறு தடவைகள் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மக்களால் முன் மொழிவுகள் முன்வைக்கப்படமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net