அரசியல் கைதிகளின் விடுதலைக்காக மாத்திரம் வரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதா?
வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களிப்பது என்பது தனித்து, அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்துடன் மாத்திரம் தொடர்புபட்டது அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சியில் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் வழங்கியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு, அதிகாரப் பகிர்வு, காணாமல் போனோர் பிரச்சினை, அபிவிருத்தி போன்ற பிரச்சினைகளுடன், அரசியல் கைதிகளின் பிரச்சினையும் ஒரு முக்கிய பிரச்சினையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தனித்து அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வரவுசெலவுத்திட்டத்தினை எதிர்ப்பதா? என்பது குறித்து, அவதானத்துடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.