முள்ளியவளை மாவீரர் துயிலுமில்ல துப்பரவுப்பணிகள் ஆரம்பம்!

முள்ளியவளை மாவீரர் துயிலுமில்ல துப்பரவுப்பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு – முள்ளியவளை மாவீரர் துயிலுமில்ல துப்பரவுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று(சனிக்கிழமை) மக்கள் பலர் ஒன்றுகூடி முள்ளியவளை துயிலுமில்லப் பகுதியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இவர்களுடன் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கரைதுறைப்பற்றுபிதேசசபை உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் காணப்பட்ட பற்றைக்காடுகள் வெட்டி அகற்றப்பட்டிருந்ததாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net