வரதட்சனை கேட்ட மணமகனிற்கு பாதி மொட்டை பரிசு!

வரதட்சனை கேட்ட மணமகனிற்கு பாதி மொட்டை பரிசு!

மோட்டார் சைக்கிள் மற்றும் தங்கச்சங்கிலி என்பன வரதட்சனையாக வேண்டும் எனக்கேட்டு திருமணத்தை நிறுத்திய மணமகனின் பாதித் தலையை மொட்டை அடித்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் வரதட்சனை காரணமாக நடைபெறவிருந்த திருமணமொன்று நிறுத்தப்பட்டது.

குறித்த திருமணத்தில் மணமகன் மோட்டார் சைக்கிள், தங்கச்சங்கிலி என்பவற்றை வரதட்சனையாக கேட்டதாகவும், மணமகள் வீட்டாரால் இதனைக் கொடுக்க முடியாமல் போனதால் அத்திருமணம் நடக்கவில்லை.

இந்தநிலையிலேயே மணமகன் தூக்கத்தில் இருந்தபோது அவரின் பாதித்தலையை இனந்தெரியாதவர்கள் மொட்டையடித்ததாகக் கூறப்படுகிறது.

மணமகனின் பாதித்தலை மொட்டையடிக்கப்பட்ட சம்பவம், லக்னோ பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன், வரதட்சனை கேட்டுத் திருமணத்தினை நிறுத்தியதற்காக அவருக்கு இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் எனவும் அப்பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net