வினைத்திறனற்ற செயற்பாட்டால் தோல்விகண்டுள்ளோம்!
வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் வினைத்திறனற்று, தெளிவற்று காணப்பட்டதால் தோல்வியையே சந்தித்துள்ளோம் என வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மாகாண சபைகளுக்கு 13ஆவது திருத்தத்தில் கொடுக்கப்பட்ட விடயப்பரப்புகளை செயற்படுத்துவதில் முழுக்க முழுக்க வினைத்திறனற்ற செயற்பாடே முன்னெடுக்கப்பட்டதென தவராசா இதன்போது சுட்டிக்காட்டினார்.
மாகாண சபை தொடர்பான தெளிவற்ற தன்மையுடனேயே மாகாண சபை கொண்டுநடத்தப்பட்டுள்ளதென குறிப்பிட்ட தவராசா, பல விடயங்களில் தவறுகள் இடம்பெற்றுள்ளதென்றும், சந்தர்ப்பங்களை இழந்துவிட்டோம் என்றும், குறிப்பாக அதிகார வரம்பு மீறல்கள் இடம்பெற்றதென்றும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு தலைமைதாங்க முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீண்டும் வருவாராக இருந்தால், மக்களை மேலும் 5 வருடங்களுக்கு பின்னோக்கிக் கொண்டுசெல்வதாகவே அமையுமென அவர் கூறியுள்ளார்.