திருமலையில் இரு குழுக்களிடையே வாள் வெட்டு 3 பெண்கள் உட்பட 10 பேர் காயம்!

திருமலையில் இரு குழுக்களிடையே வாள் வெட்டு 3 பெண்கள் உட்பட 10 பேர் காயம்!

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்கோ, மஹாமாயபுரவில் வாள் வெட்டு காரணமாக காயமடைந்த 10 பேர் திருமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று பெண்கள், 7 ஆண்கள் என 10 பேரே இவ்வாறு வாள்வெட்டுக்கு உள்ளாகியுள்ள தாக பொலிஸார் கூறினார்.

ஒரே ஊரைச் சேர்ந்த இரு குழுவினரிடையே நிலவிய முன் பகையை மையப்படுத்தி ஏற்பட்ட மோதலில் இந்த 10 பேரும் காயமடைந்து இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் இந்த வாள் வெட்டு மற்றும் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக கூறும் பொலிஸார் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி இந்த விபரீத சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறிந்துள்ளனர்.

வாள் வெட்டில் காயமடைந்தவர்களில் இரு குழுக்களையும் சேர்ந்தவர்கள் இருப்பதாக கூறும் பொலிஸார், சந்தேக நபர்கள் எவரையும் நேற்று மாலை வரைக் கைது செய்திருக்கவில்லை.

குறித்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த டி.பி.அமரகீர்த்தி ( 47 வயது), ஆர்.தினுஷா பியந்தி (39 வயது) டி.பி. அக்சயா (22 வயது), டி. பி. டி சான் (17 வயது) ஆகியோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வாள் வெட்டால் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் ஏனைய அறுவரும் 19, 24, 27, 38, 47, 52 வயதுடையவர்கள் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net