படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல்

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட்ட குரே தலைமையில் இடம்பெற்ற குறித் கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன், பா ம உறுப்பினர்களான சேனாதிராஜா, சிறிதரன், விஜயகலா, மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், கிளிநொச்சி படை கட்டளை அதிகாரி, கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலஸ்மா அதிபர், முப்படை உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலை முழுமையாக பதிவு செய்வதற்கு ஊடகவியலாளர்களிற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

கலந்துலையாடலின் நிறைவில் கலந்து கொண்டிருந்த அங்கயன் இராமநாதனிடம் வினவியபோது,

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமுள்ள தனியார் அரச காணிகள் தொடர்பில் இன்று கலந்துரையாடப்பட்டது.

முதல் கட்டமாக விவசாய நிலங்கள் விடுவிக்கப்படுவதற்கான தீர்மானங்கள் எட்டப்பட்டன். குறிப்பாக வட்டக்கச்சி விவசாய பண்ணை மற்றும் கயூ தோட்டம் என்பன இதன்போது எடுத்து கலந்துரையாடப்பட்டது.

குறித்த காணிகள் படையினர் பயன்படுத்தவில்லை எனவும், அவை பாதுகாப்பிற்காகவே படையினர் அங்கு உள்ளதாக கூறப்பட்டது. படையினர் பயன்படுத்தவில்லை என்றால் எதற்காக அங்கு விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது என வினவியிருந்தேன் என அவர் குறிப்பிட்டார். முதலல் அரச மற்றும் விவசாய காணிகள் விடுவிக்கப்படவுள்ளது.

தொடர்ந்து தனியார் காணிகள் விடுவிக்கப்படும் எனவும்குறிப்பிட்டா்ர. இதேவேளை குறித் காணிகள் விடுவிக்கப்படும் சந்தர்ப்பங்களில் சில ஏக்கர் காணிகளிற்கு பணம் வழங்கப்பட வேண்டம் என்ற விடயமும் இங்கு குறிப்பிடப்பட்டதாக பிரதி அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

குறித்த கலந்துரையாடல் தொடர்பில் வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே ஊடகங்களிற்கு குறிப்பிடுகையில்,

இவ்வருடம் 31ம் திகதிக்கு முன்னர் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

அதற்கமைய இன்று முல்லைத்தீவு மற்றும் வவுனியாவில் உள்ள காணிகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளோம். எதிர்வரும் 8ம் திகதி வடமாகாணத்தின் காணிகள் தொடர்பில் ஆராயப்பட்ட விடயங்களை கையளிக்க வேண்டும்.

தொடர்ந்து யாழ்ப்பாணம், மனனார் ஆகிய மாவட்டங்களின் காணிகள் தொடர்பில் கலந்துரையாட உள்ளோம் என குறிப்பிட்டார்.

இன்றய கலந்துரையாடலில் அரச காணிகள், தனியார் காணிகள் தொடர்பில் தனித்தனியே ஆராய்ந்திருந்தோம்.

அதற்கமைய முதலில் திணைக்களங்களிற்கான காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதற்கடுத்தபடியாக தனியார் காணிகளை வடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுனர் இதன்புாது குறிப்பிட்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net