மட்டக்களப்பில் 9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியவர் கைது!
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை பகுதியில் 9 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் 52 வயதுடைய சிற்றுண்டி கடை முதலாளியை நேற்றிரவு கைதுசெய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தரம் 4 இல் கல்வி கற்றுவரும் மேற்படி சிறுமி கடந்த 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு சென்று, பின்னர் பாடசாலைக்கு முன்னாள் உள்ள சிற்றுண்டிக் கடைக்கு சிற்றுண்டி வாங்கச் சென்றுள்ளார்.
இதன்போது கடையில் எவரும்மில்லாத தருணத்தில் கடை முதலாளி அச் சிறுமியை கடையின் பின் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் தனக்கு நோர்ந்தகதி குறித்து தெரியப்படுத்தியதையடுத்து பெற்றோர் பாடசாலை அதிபர் ஊடாக பொலிஸ் நிலையத்தில் நேற்று முறையிட்டத்தையடுத்து குறித்த கடை முதலாளியை பொலிஸார் கைது செய்தனர்.