‘யாழ்ப்பாண மாம்பழம்’ -இனிச் சந்தைக்கு வரும்!!

‘யாழ்ப்பாண மாம்பழம்’ -இனிச் சந்தைக்கு வரும்!!

வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் மாம்பழங்களின் தரத்தை விருத்தி செய்வதற்கும், உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும், விவசாயிகளுக்கு உரிய சந்தை வாய்ப்பை வழங்குவதற்கும் விவசாய அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பான ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்றது.

விவசாயிகளிடமிருந்து, நியாயமான விலையில் மாம்பழங்கள் கொள்வனவு செய்யப்பட்டு, இயற்கையான முறையில் அவை பழுக்க வைக்கப்படும். அவ்வாறு இயற்கையாகப் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் மீது என்ற ஸ்ரிக்கர் பொறிக்கப்படும்.

பொதுமக்கள் அதனை இனங்கண்டு எவ்வித தயக்கமின்றி சுகாதாரமான பழங்களைக் கொள்வனவ செய்ய முடியும்.

எதிர்வரும் காலங்களில் பப்பாசிப்பழம், வாழைப்பழம் போன்றவற்றுக்கும் இவ்வாறன திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net